12 Jan 2015

ஜனாதிபதி மைத்திரிக்கு மேலும் சில அமைச்சர், பிரதி அமைச்சர்கள் ஆதரவு

SHARE
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, லலித் திஸாநாயக்க, நியோமல் பெரேரா, தயாசிறித்த திசேர விக்டர் என்டனி, திலங்க சுமதிபால, ஏ.ஆர்.எம்.அப்துல் காதர் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இவர்கள் இன்று (12) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை சந்தித்து தங்களது ஆதரவவை அறிவித்துள்ளனர்.

புதிய ஜனாதிபதியின் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக இங்கு உரையாற்றிய பீலிக்ஸ் பெரேரா குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய ஜனாதிபதி இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: