29 Jan 2015

ஆக்கத்திறன் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

SHARE
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப்பிரிவினால் நடாத்தப்பட்ட தொழிற்பயிற்சி வகுப்பில் பயிற்சிநெறியினைப் பூர்த்திசெய்த யுவதிகளின் ஆக்கத்திறன் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ஏறாவூர்- மீராகேணி மாக்கான் மாக்கார் மகா வித்தியாலய மண்டபத்தில்  28.01.2015 நடைபெற்றன.
 பாடசாலையிலிருந்து இடைவிலகிய மற்றும் வேலைவாய்ப்பின்றிருக்கும் முப்பது யுவதிகள் எட்டு மாதகால தொழிற்பயிற்சி நெறியினைப்பூர்த்தி செய்துள்ளனர்.

இதுதொடர்பான வைபவத்தில் வலயக் கல்வியலுவலக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிதம்பரமூர்த்தி முறைசாராக் கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏஎல்எம் ஷரீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: