29 Jan 2015

நிலக்கடலை விதை உற்பத்தி அறுவடை விழா

SHARE
நிலக்கடலை விதை உற்பத்தி அறுவடை விழா மட்டக்களப்பு- தாந்தாமலைக் கிராமத்தில்   நடைபெற்றது.

தாந்தாமலை விவசாயப் போதனாசிரியர் பி.சிறிபவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் எஸ்.எம். ஹ{ஸைன்,  மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், கிழக்கு மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் இரா.ஹரிகரன், வலய உதவி விவசாயப் பணிப்பாளர்களான, ம.சிவஞானம், எஸ்.பரமேஸ்வரன், உட்பட படவிதான உத்தியோகஸ்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், பெரும்பாக உத்தியோகஸ்தர்கள், விவிசாயிகள், உட்படபலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது தாந்தாமலைக் கிராமத்தில் விவசாயத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் விதை உற்பத்திற்காகச் செய்கை பண்ணப் பட்டிருந்த இரண்டரை ஏக்கர் நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டன.





















SHARE

Author: verified_user

0 Comments: