சா.கருணாநிதி
பின்தங்கிய பிரதேசமக்களின் நலன் கருதி அம்பாரை மாவட்டத்தின் சவளக்கடைப் பொலிஸாரின் ஏற்பாட்டில் சவளக்கடைப்பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். நஜீம் தலைமையில் 24 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவையின் ஆரம்பநிகழ்வில் நாவிதன்வெளிப்பிரதேசசெயலாளர் சு.கரன் கலைமகள்வித்தியாலய அதிபர் சீ.பாலசிங்கம் வேப்பையடிவைத்தியசாலை வைத்தியர் உட்பட பலர்கலந்துகொண்டனர்.
இவ் நடமாடும்சேவையில் பொலிஸமுறைப்பாட்டுச்சேவை பொதுவைத்தியபரிசோதனை பல்வைத்தியசேவை தேசியஅடையாளஅட்டை வழங்கள் ஆயர்வேதம் போன் சேவைகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது
அதேவேளை இவ் நடமாடும்சேவையினை முன்னிட்டு அப்பிரதேச விளையாட்டுக்கழகங்களுக்கிடையில் 6 பேர் கொண்ட கிறிக்கட்மென்பந்து சுற்றுப்போட்டி கடந்த 22 ஆம் திகதியில் இருந்து நடைபெற்று அதன் இறுதிப்போட்டியும் நடமாடும்சேவை நடைபெற்ற தினமே நடாத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment