கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிராசினால் கேட்கப்பட்டு வரும் முஸ்லிம் கரையோர மாவட்டக் கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கின்றதா? என கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்புகின்றார்.
நேற்று புதன் கிழமை (31) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் திருமலை வீதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தல் நடைபெற்ற இளைஞர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் கிழக்கு மாகாண முன்னாள் கிழக்க மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மாகாணசபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எம்.எம்.ஹன்சீர் கட்சியின் பொருளாளர் ஆ.தேவராஜ் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மனோகர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்தஅவர்……
ஒவ்வொரு சமுகத் தலைவர்களும் தாம் சார்ந்த சமுகத்திற்காகவே அரசியல் அதிகாரத்தினை பாவித்து அரசியல் செய்கின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் யார் யாருக்கோவெல்லாம் வக்காளத்து வாங்குவதுடன் தாம் சார்ந்த தமிழ் சமுகத்திற்கு மாத்திரம் வேலை செய்யாது ஏனைய சமுகத்திற்காக மட்டும் வேலை செய்கின்றனர்.
இன்று மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதாக அறிக்கைவிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் தமிழர் நலம் சார்ந்த எக்கோரிக்கையினை முன்வைத்துள்ளது? வடகிழக்கு இணைப்பா? தமிழீழக் கோரிக்கையா? அல்லது 13வது அதிகாரப் பகிர்வா? எதுவுமே இல்லை! அல்லது ஆகக்குறைந்தது தமிழ் சமுகத்திற்கு சேவை புரிவதற்காக அமைச்சு பதவிகளையா? இல்லையே தன்னை ஒர் பேரினவாதி என அடையாளப்படுதியுள்ள மைத்திரியினை ஆதரிப்பது 'இரவில் வெட்டிய குழிக்குள் பகலில் விழுவது போன்றது” கிழக்கில் அரசியல் போட்டி சிங்களவர்களுக்கு தமிழர்களுக்கு அல்ல முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயே ஆகும்.
இவ்வாறான நிலையில் இலட்சக் கணக்கான உயிரையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்து தனி நாடு கேட்ட சமுகத்தினை வழி நடத்துவதாகக் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அம்பாறையில் தமிழர்கள் படும் இன்னல்களh ஒடுக்கு முறைகளை அறிந்திருந்தும் வேடிக்கை பார்ப்பதுடன் மஹிந்த ராஜபக்ஸ அரசியல் அதிக நன்மை அடைந்த ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் கரையோர மாவட்த்திற்கு மகிந்த அரசு அனுமதி கொடுக்கவில்லை என்றவுடன் மைத்திரிக்கு ஆதரவு கொடுக்கின்றது.
அது அவர்கள் பிரச்சனை ஆனால் தமிழர் தமிழ் இரத்தம் தனித்துவம் என்று கூறி போலி அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2012இல் கிழக்கை ஆண்ட தமிழனை இல்லாது செய்து முதலமைச்சர் அதிகாரத்தினை மாற்றிக் கொடுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரசுடன் சோரம் போயுள்ளது அம்பாறை மற்றும் கிழக்குத் தமிழர்களுக்குச் செய்த துரோகமாகும்.
2010 ஜனாதிபதித் தேர்தல் 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் தமிழர்களுக்கு பாரிய படிப்பினையினை பெற்றுத் தந்துள்ளது. கடந்த காலத்திளை போல் இம்முறை கிழக்குத் தமிழர்கள் ஏமாறமாட்டார்கள் மஹிந்தராஜபக்ஷவின் வெற்றிக்கு பங்காளியாக ஆவார்கள் என உறுதியாகக் குறிப்பிடுகின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment