ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின்
ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல்
பிரச்சாரப் பணிகள் தற்பொழுது காத்தான்குடி பிரதேசத்தில்
துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கமைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் மட்டக்களப்பு தேர்தல்
தொகுதிக்கான தேர்தல் முகவரும்,மாவட்ட அபிவிருத்திக்குழுவின்
தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் 30-12-2014 நேற்று முன்தினம்
செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பஸ்மலா சதுக்கத்திலும்,31-12-2014 நேற்று
புதன்கிழமை காத்தான்குடி முதலாம் குறிச்சி மார்க்கட் சந்தியிலும்
இடம்பெற்றது.
இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் காத்தான்குடி நகர சபை தவிசாளர்
எஸ்.எச்.எம்.அஸ்பர்,பிரதித் தவிசாளர் ஜெஸீம்,நகர சபை உறுப்பினர்களான
பாக்கீர்,அலி சப்ரி,சியாட் பொது மக்கள்,கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து
கொண்டனர்.
இதன் போது நாங்கள் ஏன்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டுமென்பது
தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஷேட உரை நிகழ்த்தினார்.(nb)
0 Comments:
Post a Comment