பிரதேசங்களின் உட்கட்டமைப்பு, கல்வி, சமூகங்களுக்கு இடையேயான ஒற்றுமை,
புறக்கணிக்கப்படுபவர்களுக்காக குரல் கொடுத்தல், அநீதிக்கு எதிராக போராடுதல்
போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி மதத்தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள்
போன்றோரை உள்ளடக்கி ஸ்ரீலங்கா மக்கள் சக்தி என்ற அமைப்பு அங்குராப்பணம்
செய்துவைக்கப்பட்டது.
ஏறாவூர் பைசானியா மதீனா அரபுக் கல்லுரியின் அதிபர் மௌலவி பீ.எம்.ஏ.ஜலீல்
பக்கரி தலைமையில் கல்முனை இக்பால் கழக கேட்போர் கூடத்தில் இன்று (23)
இன்றைய நிகழ்வில் இந்த அமைப்பின் நிர்வாகிகள் அறிமுகம் செய்து
வைக்கப்பட்டதுடன் அமைப்பின் செயற்பாடுகள் பற்றியும் விரிவாக
எடுத்துக்கூறப்பட்டது.
அமைப்பின் தலைவராக ஏறாவூர் பைசானியா மதீனா அரபுக் கல்லுரியின் அதிபர் மௌலவி
பீ.எம்.ஏ.ஜலீல் பக்கரி அவர்களும் செயலாளராக கலாநிதி எம்.ஐ.எம்.ஜிப்ரி
அவர்களும் உபதலைவராக மௌலவி ஏ.எல்.ரசாக் அவர்களும் உபசெயலாளராக
ஏ.எம்.ஹக்கீம் ஆசிரியரும் பொருளாளராக எம்.ஏ.காதரும் இணைப்பாளராக
எம்.பி.மக்றுப் அவர்களும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
அமைப்பின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக அரசாங்கத்தினதும் அரச சார்பற்ற
நிறுவனங்களதும் உளசுத்தியான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பது என்றும்
நோக்கங்களை விரைவுபடுத்த அழுத்தங்களை கொடுப்பது என்றும் சபை முன்னிலையில்
பிரகடனப்படுத்தப்பட்டது.
0 Comments:
Post a Comment