24 Jan 2015

ஆரையம்பதியில் பழைய விலைக்கு எரிபொருள் விற்பனை செய்த பெற்றோல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

SHARE
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை குறைப்புக்கமைய பெற்றோலை விற்பனை செய்யாது  பழைய விலைக்கு விற்பனை செய்த காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பெற்றோல் நிலையமொன்றை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அங்கு சில மணி நேரம் அமைதியின்மை ஏற்பட்டது.

காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் அமைந்துள்ள குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்150 ரூபாய்க்கு  எரிபொருள் நிரப்பிய பலர் மீதி பணத்தை தருமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தினர்.

ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. வெதகெதர தலைமையிலான  பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திடம் தொடர்பு கொண்டு கேட்ட போது குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது. குறித்த பெற்றோல் நிலையத்திற்கு பொலிஸ் நிலைய பாதுகாப்பு வழங்கப்பட்டது.
SHARE

Author: verified_user

0 Comments: