
சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் வழிகாட்டலில், கல்முனை
பிராந்திய சுகாதார வைத்திய பணிபாளர் பிரிவின் கீழ்லுள்ள 13 சுகாதார
வைத்தியர் அதிகாரி பிரிவில் கடமையாற்றும் வைத்தியர்கள்,பொதுச்சுகாதார
ஊழியர்கள், தாதியர்கள் மற்றும் எழுதுவினைஞர்கள், ஊழியர்களை அனர்த்த
முகாமைத்துவம் சார்ந்த துறையில் தெளிவூட்டும் நிகழ்வும் அனர்த்த
முகாமைத்துவம் சார்ந்த உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் கல்முனை
பிராந்திய சுகாதார வைத்திய பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன்
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சுதந்திகா பெரேரா கலந்து கொண்டு விரிவுரை
வழங்கினார்.
இந்நிகழ்வில் அனர்த்த வேளையில் பாவிக்கக்கூடிய உபகரணங்கள் பொதுச்சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவுகளுக்கு பணிப்பாளர்களால் வழங்கி வைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment