29 Jan 2015

கிராம சேவை அதிகாரிகளுக்கு விழிப்பூட்டல் நடவடிக்கை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை குறைத்தல் மற்றும் குற்றச்செயல்கள் இடம்பெற்ற இடங்கள் மற்றும் தடங்களை பாதுகாத்தல் தொடர்பாக அம் மாவட்டத்திலுள்ள 14 பிரசே செயலகப் பரிவுகளிலும் கிராம சேவை அதிகாரிகளுக்கு விழிப்பூட்டல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குற்றச் சம்பவங்களை பரிசீலனை செய்யும் பிரிவின் (சொகோ) மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.ரவிச்சந்திரன் தலைமையில் விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் இன்று ஆரையம்பதி, காத்தான்குடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் கிராம சேவை அதிகாரிகளுக்கு விளக்கமூட்டப்பட்டன.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் கே.வாசுதேவன் தலைமையில் ஆரையம்பதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற விழிப்பூட்டல் நிகழ்வில் கிராம சேவை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: