(யுவாமி)
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி பிரNjசத்தில் கடந்த 27ம் திகதி போக்குவரத்து பயண அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் விற்பனைக்ககாக மண் ஏற்றி சென்ற நபர் மற்றும் வாகனம் பொலிஷாரால் கைப்பற்றப்பட்டது.
வளகம்புற கிங்குராணை 14/14 கட்டையைச் சேர்ந்த NWLH-6648 வாகன இலக்கமுடைய வாகன உரிமையாளரே பொலிஷாரால் கைப்பற்றப்பட்டார்.அன்றைய தினம் இவர் சட்டவிதிகளை மீறி போக்குவரத்தது பயண அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி சென்றமையால் கைது செய்யப்பட்டதாக பொலிஷார் தெரிவித்தனர்.இவரை பொலிஷாரின் பிணையில் விடுவிற்கப்பட்டதாகவும் எதிர்வரும் 02.02.2015ம் திகதி இவருக்கு எதிரான வழக்கு களுவான்சிகுடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் பொலிஷார் தெரிவித்தனர்.
வழக்கு தொடரப்படும் வரைக்கும் கைப்பற்றப்பட்ட வாகனம்பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஷார் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment