புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட எபோலா
பரிசோதனைத் தடுப்பு மருந்துக்கள் நம்பிக்கையை அளித்து வருவதாகவும் இவை
விரைவில் ஆப்பிரிக்காவில் எபோலா நோயாளிகளுக்கு உதவி வரும் ஆரோக்கியமான
மருத்துவ தொண்டூழியர்களிடம் பரிசோதிக்கப்படவுள்ளதாகவும் உலக சுகாதார
ஸ்தாபனமான WHO தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் WHO இன் எபோலா தடுப்பு
மருந்து ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான மாரியே பௌலே கியெனி அண்மையில்
பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். இதன் போது அவர், மெர்க்
மற்றும் நியூலிங் மற்றும் கிளக்ஸோ ஸ்மித் கிலினே ஆகிய அமைப்புக்களால்
அங்கீகாரம் அளிக்கப்பட்ட இரு தடுப்பு மருந்துகளது முதற்கட்ட பரிசோதனை
நடத்தப் பட்டு விட்டதாகவும் இவற்றின் பலனாக இம்மருந்துகள் உரிய பலனை
அளிக்கும் என்பதற்கான உண்மையான நம்பிக்கை கிடைத்திருப்பதாகவும் அவர்
தெரிவித்தார்.
இவ்விரு மருந்துகளுமே ஏற்கத்தக்க பாதுகாப்பு விளைவுகளையே உண்டு பண்ணும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் இவை மிக அதிகளவு மக்களிடம் பர்சோதிக்கப் பட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இத்தடுப்பு மருந்துகள் ஆப்பிரிக்காவில் பணியாற்றி வரும் தொண்டூழியர்களிடையே விரைவில் பரிசோதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
முன்னதாக மேர்க் மற்றும் நியூலிங் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் பரிசோதனை நிகழ்த்தப்பட்ட போது குறித்த நபர்களுக்கு தற்காலிக மூட்டு வலி ஏற்பட்டிருந்தது என அறிவிக்கப் பட்டது. ஆனால் புதிய தடுப்பு மருந்துகளின் முதற் கட்டப் பரிசோதனையில் இவை ஏற்படவில்லை. இதேவேளை அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் கூட வெவ்வேறு எபோலா தடுப்பு மருந்துகள் பரிசோதிக்கப் பட்டு வருகின்றன.
உலகம் முழுதும் இதுவரை எபோலா 19340 பேருக்குத் தொற்றி இருப்பதாகவும் இதில் 7518 பேர் வரை பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதாரத் தாபனமான WHO இன் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றது. இந்நிலையில் இவ் நம்பிக்கையினை அளிக்கும் தடுப்பு மருந்துகள் லைபீரியாவில் ஜனவரி மாதக் கடைசிப்பகுதியிலும் சியாரா லியோன் மற்றும் கினியாவில் பெப்ரவரி மாதம் ஆரம்பத்திலும் பாவிப்பதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment