ஹீரோவாக நடித்தபடி படம் தயாரிக்கும் தனுஷ், விஷால், சிம்பு பட்டியலில்
ஆர்யாவும் இணைந்திருக்கிறார். அடுத்து எம்.ராஜேஷ் இயக்கத்தில் விஎஸ்ஓபி
என்ற படம் தயாரித்து நடிக்கிறார். தமன்னா ஹீரோயின்.
விஎஸ்ஓபி என்பது
பிரபல மதுவின் பிராண்ட் நேம் ஆயிற்றே அதைப்பற்றிய படமா என்று கேட்டபோது
ஷாக் ஆன ஆர்யா, ‘ஐய்யய்யோ… இல்லீங்க. விஎஸ்ஓபி பிரபல மதுவகையின் பெயர்தான்.
ஆனால் பட டைட்டிலுக்கு அது அர்த்தம் கிடையாது. ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா
படிச்சவங்க‘ என்பதுதான் தலைப்பு. அதன் முதல் எழுத்தைத்தான் இப்படி
சொல்கிறார்கள்.
சமீபத்தில் எந்த ஹீரோயினுக்கு பிரியாணி
கொடுத்தீர்கள் என்கின்றனர்.
மறுபடியும் மறுபடியும் இதையே கேட்டு
போரடிக்கிறார்கள் என்றார்.தமிழில் கவனம் செலுத்தி வரும் ஆர்யா தற்போது
மலையாள படங்களிலும் கவனத்தை திருப்பி இருக்கிறார். நடிகர் பிருத்விராஜ்,
சந்தோஷ் சிவன் சேர்ந்து தொடங்கி இருக்கும் ஆகஸ்ட் சினிமா என்ற பட கம்பெனி
யில் நடிகர் ஆர்யாவும் நிறுவன இயக்குனர்களில் ஒருவராக இணைந்திருக்கிறார்.
ஏற்கனவே
இந்நிறுவனம் தயாரிக்கும் ‘டபுள் பேரெல்‘ என்ற மலையாள படத்தில் முக்கிய
வேடத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. சந்தோஷ் சிவன் தமிழ், மலையாளத்தில்
இயக்கிய ‘உருமி‘ படத்திலும் ஆர்யா நடித்திருக்கிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment