
சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் பேன்டஸி படம்
புலி. துப்பாக்கி, கத்தி என்று தொடர்ந்து ஆயுதங்களின் பெயர் கொண்ட
படங்களில் நடித்த விஜய் தற்போது விலங்கின் பெயர் கொண்ட படத்தில்
நடிக்கிறார்.
ஆனால் இந்த பெயரும் நிலையில்லை என்று கூறப்படுகிறது. படத்தின் பெயர் மாற்றப்படலாம் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
ஹாங்காங்கைச் சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் நாங் (Nang)கூறியபடி விஜய்
பயங்கரமான ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளாராம். புலி படத்தின் படப்பிடிப்பு
பற்றி பல செய்திகள் வருவதை பார்த்துவிட்டு இரசிகர்களிடம் ஒரு
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த
எதிர்பார்ப்பு. இந்நிலையில் தான் இரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியை
தெரிவிக்கிறோம். புலி படத்தின் பர்ஸ்ட் லுக் பெப்ரவரி மாதம் 2வது வாரத்தில்
வெளியாகுமாம்.
புலி படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment