அவுஸ்திரேலியா கடற்கரைகளில் சூரிய குளியலுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா, டாஸ்மானியா,
குயின்ஸ்லாந்து, சிட்னி ஆகிய கடற்கரைகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா
பயணிகளால் அதிகம் கவரப்பட்ட இடங்கள் ஆகும்.
இந்த இடங்களில் செயற்கை சூரிய குளியல் படுக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 70 வயதை கடந்த 3ல் ஒருவர் புற்றுநோயால்
பாதிக்கப்படுகின்றனர். அதனை கருத்தில் கொண்டு அந்நாட்டு அரசு சூரிய
குளியலுக்கு தடை விதித்துள்ளது.
புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியா முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தடையை அவுஸ்திரேலிய புற்றுநோய் ஆணையம் வரவேற்றுள்ளது. சூரிய
குளியல் படுக்கைகளுக்கு தடை விதிப்பதன் மூலம் தோல் புற்றுநோயை தடுக்க
முடியும் என்று அந்த ஆணையம் அவுஸ்திரேலிய அரசுக்கு வலியுறுத்தி வந்தது
குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment