2 Jan 2015

தாயை சுட்டுக் கொன்ற 2 வயது குழந்தை! (வீடியோ இணைப்பு)

SHARE
அமெரிக்காவில் இரண்டு வயது குழந்தை தனது தாயை சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஐடஹோ(Idaho) மாநிலத்தில் உள்ள பிளாக்புட்(Blackbut) பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா ரட்லஜ்(Veronica Rutledge Age-29).
இவர் தனது குடும்பத்தாருடன் ஹேடன்(Hadon) பகுதியில் வசிக்கும் உறவினர்களின் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர் தனது 2 வயது மகன் உள்பட 4 குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள வால்மார்ட் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது கைப்பையை எடுத்து, அதிலிருந்த துப்பாக்கியை கையில் எடுத்த குழந்தை தனது தாயை நோக்கி சுட்டுள்ளது.

இதில் குண்டு பாய்ந்த வெரோனிகா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரின் கணவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் உடலை மீட்டு சென்றுள்ளார், இச்சம்பவத்தை அடுத்து வால்மார்ட் கடை நாள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: