16 Jan 2015

வலது குறைந்தவருக்கான சுயதொழில் ஊக்குவிப்பு

SHARE
மட்டக்களப்பு, கல்லாறு மத்திய விளையாட்டுக் கழகத்தினால், வலது குறைந்த ஒருவரின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில்இ அரிசி அரைக்கும் ஆலை அமைப்பதற்கான நிதி வழங்கி வைக்கப்பட்டதுடன் அதற்கான அடிக்கல்லும் தைப் பொங்கல் தினமான புதன்கிழமை அன்று    (14) நாட்டப்பட்டது.

கல்லாறு பிரதேசத்தில் வசித்து வரும் எழில்வேந்தன் என்பவருக்கே, மூன்று இலட்சம் ரூபாய் நிதியில் இக்கட்டடம் அமைத்து கொடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில், தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ப.நடராசா கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்




SHARE

Author: verified_user

0 Comments: