மழைக்கும் மத்தியில் காட்டு யானைகளை அப்புறப்படுத்தும்
முயற்சிகளை முன்னெடுக்கும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்.
இந்நிலையில் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் அப்பகுதிக்கு வருகைதந்து அங்கிருந்து குறித்த காட்டுயானைகளை கட்டுப் பகுதிக்குள் அனுப்பி வைப்பதற்குரிய பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தக் காட்டுயானைக் கூட்டம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக களுவாஞ்சிக்குடி நகர்பகுதியை அண்மித்த பகுதிகளில் உணவுதேடி சுற்றித்திரிந்து மக்களையும் அச்சுறுத்தி வந்திருந்தது.
பல்வேறு பிரயேத்ததனங்களுக்கு மத்தியில், உயிர் அச்சுறுத்தல்களுடன் வெல்லாவெளி பகுதி வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினர் காட்டு யானைக் கூட்டத்தை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்கட்கிழமை முழுவதும் மழையுடனான வானிலை நிலவுவதால் காட்டு யானைகள் துரத்தும் பணியில் தாமதம் ஏற்படுவதாக இதன்போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment