இந்த ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தவுள்ள
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி நேற்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனி தலைமையிலான இந்த அணியில் 15 பேர் இடம்பெற்றுள்ளனர். நடப்புச் சாம்பியனான இந்திய அணியில் புதுமுகமாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் இடம்பெற்றுள்ளார்.
அதேபோல் சகலதுறை ஆட்டக்காரர் ரவீந்திர ஜடேஜாவும் சேர்க்கப்பட்டுள்ளார். தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடைந்துவிட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சிக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருபவரும், கடந்த உலகக் கிண்ண தொடர் நாயகனுமாக யுவராஜ் சிங் அணியில் சேர்க்கப்படலாம் எனும் ஊகங்களும் பொய்த்துப் போயுள்ளன.
ரஞ்சிக் கிண்ண போட்டியில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை யுவராஜ் சிங் அடித்திருந்தாலும், முதலில் அறிவிக்கப்பட்டிருந்த 30 பேர் கொண்டப் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
எனினும் அவரது பெயர் உட்பட பலரது பெயர்கள் தேர்வுக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டன என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலர் சஞ்சய் பட்டேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவக் கூடும் என்று கருதப்படுவதால் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா, புவனேஷ் குமார், மொஹமத் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
துடுப்பாட்டத்தைப் பொருத்தவரையில் அணியின் தலைவர் தோனியைத் தவிர ஷிகார் தவான், விராட் கோலி, அகிஞ்ச்க்ய ரஹானே, ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரய்னா, அம்பட்டி ராயுடு ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர சுழற்பந்து வீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஷர் பட்டேல் ஆகியோர் உள்ளனர்.
அணியில் இடம்பெறுவார்க என்று எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய், ராபின் உத்தப்பா ஆகியோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நடைபெறவுள்ள இந்த உலகக் கிண்ண போட்டியில் இந்தியா ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இப்போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி தொடங்கி மார்ச் மாதம் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

0 Comments:
Post a Comment