7 Jan 2015

பெண்களை கேலி செய்தவரை வித்தியாசமாக தண்டித்த பெண் பொலிஸ்

SHARE
இந்தியாவில் பாடசாலை மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த இளைஞரை பிடித்த பெண் பொலிஸ் அதிகாரி, பொதுஇடத்தில் வைத்து அவரை மற்ற பெண்களை விட்டு தர்மஅடி கொடுக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் செந்த்வா பகுதியை சேர்ந்த இளைஞர் விராட் டோனி (வயது 23). விராட் டோனி, அப்பகுதியில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மாணவிகளின் அருகே சென்று தொல்லை கொடுத்தல், விசில் அடித்தல், சாடையாக கூப்பிடுதல் என பல்வேறு இம்சைகளை கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் பெரும் இன்னலுக்கு உள்ளான மாணவிகள் எத்தனைமுறை எச்சரித்தும் விராட் டோனி கேட்கவில்லை.

பெரும் சிரமத்திற்கு உள்ளான மாணவிகள் அப்பகுதியை சேர்ந்த பெண் பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோனிகா சிங்கிடம் எடுத்துக் கூறினர்.

உடனடியாக டோனியை பிடித்த பெண் பொலிஸ் அதிகாரி மோனிகா சிங், பொது இடத்தில் அவமானம் அடைய செய்யும் விதமாக பெண்களை வைத்து தர்மஅடி கொடுக்க வைத்தார்.

புகார் தெரிவித்த பெண்களை வைத்தும் முதுகில் அடிக்க வைத்தார். வாலிபரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வதாக மோனிகா சிங் கூறினார்.

இதனையடுத்து வாலிபர் விராட் டோனி மாவட்ட நீதிபதிடம் புகார் அளித்தார். பொதுமக்கள் முன்னே வைத்து என்ன தண்டித்தது மிகவும் அவமானமானதாகும். என்னை கோர்ட்டிற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். பின்னர் எனக்கு தண்டனை வழங்கப்பட்டு இருக்கவேண்டும். என்று விராட் டோனி கூறினார்.

´என்னை அந்த பெண்கள் அடித்த போது, அங்கு நின்றது எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அவர்கள் மீது என்னுடைய விரல்கூட படவில்லை. யார் குற்றவாளி, யார் குற்றவாளியில்லை என்பதை முடிவுசெய்வது பெண் பொலிஸ் அதிகாரியின் வேலையில்லை.´ என்று விராட் டோனி கூறினார்.

ஆனால் நீதிபதி அவருடைய குற்றச்சாட்டை ஏற்க மறுத்துவிட்டார். டோனிக்கு அடிதேவைதான், பொதுஇடத்தில் வைத்து பாடசாலை மாணவிகளை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார். அவர் பொது இடத்தில் வைத்து தண்டிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் சரியானதே. என்று நீதிபதி தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: