1 Feb 2015

கிழக்கின் முதலமைச்சர் யார்? அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் அறிவிப்பேன் என்கிறார் மு.கா. தலைவர் ஹக்கீம்

SHARE
8-PMMA CADER-31-01-2015 கிழக்கின் முதலமைச்சர் பதவியை பெறுகின்ற வாய்ப்பை எமது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பெற்றுள்ள நிலையில் அந்த முதலமைச்சர் யார் என்பதை அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் நான் அறிவிப்பேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.




இன்று (31-01-2015) நண்பகல் 12.00 மணியளவில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர்; றஊப் ஹக்கீம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும்,கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்தல் மஜீட் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் றஊப் ஹக்கீம் மேலும்; உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அங்கீகாரத்துடன் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப் போகின்ற ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளையும் இணைத்து ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.
மக்களுக்கான இந்த நல்லாட்சியில் எல்லாக் கட்சிகளும் சார்ந்த பிரதிநிதிகளும் பூரண ஒத்துளைப்பை வழங்க முன்வர வேண்டும்.
நடக்கின்ற 100 நாள் வேலைத் திட்டத்தில் எல்லா விடயங்களையும் செய்து விட முடியாது. இக்காலப் பகுதிக்குள் பெரும்பாலும் அரசியல் யாப்பு சீர்திருத்தங்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது.
அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நானும் பிரதிச் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரும் கலந்து கொண்டு பங்களிப்பு செய்து வருகின்றோம். அது குறித்த விடயங்களை இங்கு நிசாம் காரியப்பர் விளக்கிக் கூறுவார்.
இது தவிர மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் நமது கட்சியும் பங்களிப்பு செய்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைய முடியும்.
இதற்கான வாக்கெடுப்பு பெப்ரவரி ஏழாம் திகதி இடம்பெறும் போதே இந்த அரசாங்கத்தின் பெரும்பான்மையை அறிந்து கொள்ள முடியும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிட்யின் தலைமைப் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால ஏற்றுள்ள நிலையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் எவ்வாறு அமையும் என்பதை எம்மால் கூற முடியாதுள்ளது. அதனால் அந்தத் தேர்தல் மிகவும் வித்தியாசமானதாக அமையலாம். ஏச்சுப் பேச்சு இல்லாத தேர்தல் களமாக அது இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் நாமும் அத்தேர்தலுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் எமது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தி கட்சிக் கிளைகளை புனரமைத்து நமக்குள் ஸ்தீரத்தன்மையை ஏற்படத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.
எமத நெகிழ்வுத் தன்மையால் மாற்றுக் கட்சிகள் எமது கட்சிக் கோட்டைகளுக்குள் ஊடுருவி வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்கு இடமளிப்போமாயின் நாம் கடந்த கால ஆட்சியில் இருந்த நிலைமைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படலாம் என்பதை கட்சிப் போராளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஹக்கீம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிசாம் காரியப்பர்; பிரதமர் ரணில் தலைமையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் யாப்பு சீர்திருத்தப் பணிகள் தொடர்பில் விலாவாரியாக எடுத்துரைத்து தெளிவுபடுத்தினார்.
ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை மு.கா.குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட கட்சிப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ.அன்சில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் ஆகியோர் கூட்டத்தை நெறிப்படுத்தினர்.
5-PMMA CADER-31-01-2015??????????????????????????????? 6-PMMA CADER-31-01-2015 7-PMMA CADER-31-01-2015
SHARE

Author: verified_user

0 Comments: