20 Dec 2014

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு எந்தவொரு வரப்பிரசாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

SHARE
இந்த நாட்டிலே வாழுகின்ற இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்ட வரலாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசிலேதான் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தெரிவித்தார்.

இன்று (20) காலை மாகாண சபை உறுப்பினரின் மக்கள் பணிமனையில் நடைபெற்ற விவசாயப் பிரதிநிதிகள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்த நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு எந்தவொரு வரப்பிரசாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

எந்தவொரு மானியத்திட்டத்தையும் அமுல் படுத்தாமல் இந்த நாட்டின் தேசிய உற்பத்திக்கு கைகொடுத்தவர்களை உதாசீனம் செய்த வரலாறுகளை நாம் இலகுவாக  மறந்து விடக் கூடாது.

உரம் களைநாசினி மற்றும் கிருமிநாசினிகளை கூடுதலான விலையில் விவசாயிகள் கொள்வனவு செய்து மேற்கொண்ட  தமது விளைச்சல்களைக் கூட சரியான விலைக்கு விற்க முடியாமல் விவசாயிகள் திண்டாடினர் இதனால் இவர்கள்  தொடர்ச்சியான கடனாளிகளாக மாற்றப்பட்டனர்.

ஏன் தமது விளைச்சல்களை விற்க முடியாமல் விவசாயிகள் வீதிகளில் நெல் மூட்டைகளை போட்டு எரித்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன் சில விவசாயிகள் தமது கடன் சுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தங்களுக்கு தாங்கள் தீமூட்டியும் மாண்டனர் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறான காலகட்டத்தில் ஆட்சிபீடம் ஏறிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆட்சியின் போதே விவசாயிகள் மதிக்கப்பட்டதுடன் அவர்களுக்குரிய வசதிவாய்ப்புக்களை அரசு நிறைவெற்றியது.
இன்று விவசாயிகள் தமது விளைச்சல்களை சரியான விலைக்கு விற்பனை செய்து தாம் செய்தவருகின்ற தொழில் மூலம் ஊதியம் பெறக்கூடியவர்களாக மாறியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி இன்று விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தின் மூலம் 5,500 – 6,000 ரூபாய் பெறுமதியான 50 கிலோகிராம் உரமூட்டை ஒன்றை 350 ரூபாவுக்கு வழங்கி வருகின்றமை இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு செய்த பாரிய கௌரவமாகும் கடந்த காலங்களில் வரட்சி காரணமாக செய்கை பன்னப்படாத விவசாயக் காணிகளுக்கு விதை நெல் மாணியங்களும் வழங்கப்பட்டு வருவதை நீங்கள் அறீவீர்கள்.

இவ்வாறு விவசாயிகளை கௌரவப் படுத்திய மஹிந்த ராஜபக்ஷவுக்கு விவசாயிகள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.(tm)
SHARE

Author: verified_user

0 Comments: