இலங்கை நாட்டுக்கு சகல அதிகாரங்களும் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையே இருக்க
வேண்டும். இது சிறுபான்மைச் சமூகங்களுக்கு அதிக நன்மையுடையதாக அமையும் என
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை
தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வெள்ளிக்கிழமை(19) இடம் பெற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
சர்வதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ இருந்தமையினால்தான் மிகவும் துனிச்சலாக தூரநோக்கான சிந்தனையுடன் சர்வதேசத்தின் எதிர்ப்புக்களையும் எதிர்த்து யுத்தத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் முடிவுகட்டினார்.
யுத்தத்தை முடித்த கையுடன் நாட்டை துரித அபிவிருத்தியின் பக்கம் கொண்டு சென்று ஒரு சுமூகமான சூழ்நிலையை தோற்றிவித்துள்ள வேளையில் சர்வதேசத்தின் சதிவலையில் மீண்டும் கொண்டு செல்வதற்கு எதிர் கூட்டமைப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
எதிர்தரப்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவினால் பயங்கரவாதத்தையும் யுத்தத்தையும் முடிவுக்கு கொண்டு வர முடிந்ததா? அல்லது மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க முடிந்ததா? இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்ததா? போன்ற விடயங்களை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
100 நாட்களுக்குள் இவர்களால் பிரதமர் ஆட்சியை கொண்டுவருவதென்பது அப்பட்டமான ஏமாற்றாகும் பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த கால யுத்தத்தின் போது பொத்துவில் பிரதேசம் அனைத்து துறைகளிலும் பாதிக்கப்பட்டன.
மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள், தமது தொழில் துறைகளை செய்ய முடியாது தங்களது ஜீவனோபாயங்களை இழந்து வறுமையில் வாழ்ந்து வந்தார்கள்.
ஆனால், இன்று சுதந்திரமாக தொழில்களுக்குச் சென்று வருகின்றார்கள், மேலும் அவர்களுக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் செய்யப்பட்டு மக்களின் வாழ்வாதார உதவிகளும் இந்த அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

0 Comments:
Post a Comment