20 Dec 2014

காரணமாக கந்தளாய்க் குளத்தின் நீர் மட்டம் 115,000 கன அடியாக உயர்த்து

SHARE
கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக கந்தளாய்க் குளத்தின் நீர் மட்டம் 115,000 கன அடியாக உயர்த்துள்ளதையடுத்து, ஒரே நேரத்தில் 10 வான் கதவுகள் 1.5 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஒரு நிமிடத்துக்கு மூவாயிரம் கன அஎ நீர் கந்தளாய்க் குளத்தில் இருந்து வெளியேறுகின்றது. இதன்காரணமாக இக் குளத்தை அண்டிய திவுல்ஹஸ்வௌ,  பேராறு போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, அடை மழை காரணமாக கிண்ணியாவில் பெரியாற்றுமுனை, றஹ்மாணியா நகர், மாஞ்சோலை, அண்ணல் நகர் போன்ற பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
SHARE

Author: verified_user

0 Comments: