11 Dec 2014

சுடர்ஒளி பிராந்திய செய்தியாளர்கள் சந்திப்பு!

SHARE
சுடர்ஒளி பத்திரிகையின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று ரீ.எப்.சீ. விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது.

சுடர்ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஏ.அரூன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.ஜெனதன், கல்விச்சுடர் ஆசிரியர் ஏ.எச்.எம்.இஜாஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன், மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம், சுடர்ஒளியின் முன்னாள் உதவி ஆசிரியர் அஸ்லம் எஸ்.மௌலானா, தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் மற்றும் ஊடகவியலாளர்களன எஸ்.எல்.மன்சூர், சக்தி உட்பட மற்றும் பலரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

முழுநாள் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த சுடர்ஒளியின் பிரதேச செய்தியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் சுடர்ஒளி பத்திரிகையின் எதிர்கால வளர்ச்சிக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுடர்ஒளி ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது




SHARE

Author: verified_user

0 Comments: