ஒரு நாட்டினுடைய தலைமை ஒரு விடயத்தில் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல்
நாட்டினுடைய அபிவிருத்தி, பாதுகாப்பு, சகோதரத்துவம் சமாதானம், விவசாயம்,
தொழில் நுட்பம் போன்ற எல்லாத்துறைகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்த
வேண்டும். தலைமைகளுக்கு ஆளுமை இருக்கிறது. ஒவ்வொரு தலைமைக்கும் அதனுடைய
பரப்பிற்கேற்றளவுக்கு அந்த ஆளுமைகள் பாதிக்க வேண்டி வரும்; என உள்ளுராட்சி,
மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேசத்தில் வரட்சியனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான
காசோலை வழங்கும் நிகழ்வு புதன் கிழமை நேற்று (10) சம்மாந்துறை அப்துல்
மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
இவ்வாறு ஒரு நாட்டினது தலைமை என்பது எவருக்கும் அடிபணிந்து, கட்டுப்படக்
கூடியவராக இருக்கக் கூடாது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின்
ஆட்சிக் காலத்தில் இந்தியப் படையினர் வானூர்திகளில் வந்து இந்த நாட்டின்
இறைமையையும், ஜனநாயகத்தையும் மீறி நாட்டிற்குள் அத்துமீறி பொதிகள் போட்டுச்
சென்ற வரலாறுகளை இந்த தேசத்தினை நேசிக்கின்ற எந்த மகனும்
மறந்துவிடமாட்டான். இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.
2005 ஆம் ஆண்டில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது எமது ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ கூறிய அத்தனை விடங்களையும் செய்துள்ளார். யுத்தத்தை
முடித்து இந்த நாட்டின் இறமையைப் பாதுகாத்து துரித அபிவிருத்தியை கொண்டு
வருவேன் என்றார. அதனை செய்து காட்டினார்.
யுத்தத்தை வைத்து அரசியல் செய்தவர்களுக்கும், இந்த நாட்டை சூறையாட
நினைத்த சர்வதேசத்தற்கும் பயங்கரவாதத்தை ஒழித்து யுத்தத்தை விரைவாக
முடிவுக்குக் கொண்டு வந்தமை கசப்பான விடயமாகவே மாறியுள்ளது. இதற்காகவே உலக
நாடுகள் உள்நாட்டிலுள்ள அரசியல் முகவர்களை வைத்துக் கொண்டு மஹிந்த
ராஜபக்ஷவையும், இந்த நாட்டையும் அடக்கி ஆளுவதற்கு முட்பட்டு
வருகின்றார்கள். ஆனால் அதற்கு ஒருபோதும் அடிய பணிய இந்தத் தலைமை
முன்வரவில்லை.
இதுதான் தலைமைத்துவ ஆளுமையின் பண்பாகவும், நாட்டை நேசிக்கின்ற ஒரு
மகனின் செயற்பாடாகவும் காணமுடியும், இது எமது தேசம், இதற்கான இறமையும்,
ஜனநாயகமும், சுதந்திரமும் இந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் மட்டுமே
உள்ளன.
இதற்காகவே இன்று வேறொரு வழியில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு சர்வதேச
நாடுகள் கடுமையான பிரயத்தனங்களை செய்து வருகின்றன. அதற்காக பெறுமதியான
விலைகள் கொடுக்கப்பட்டுவருகின்றன.
தேசிய காங்கிரஸ் கட்சியானது இரண்டு விடங்களை மட்டுமே ஜனாதிபதியிடம்
கூறியிருந்தது. ஓன்று இந்த நாட்டின் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்படல்
வேண்டும். இரண்டாவது வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்
படல்வேண்டும். அவைகளை இன்று ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார். ஆதலாளால்தான்
இம்முறை எந்தவிதமான நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்துள்ளோம்.
ஜனாதிபதி பற்றி குறை கூறுபவர்கள் ஏன் எந்தவொரு தலைவராலும் செய்ய முடியாத
பல வரலாற்று வெற்றிகளையும், செயற்திட்டங்களையும் பற்றி கூறுவதில்லை. பிழை
கூறுபவர்கள் அவர் செய்த நல்ல விடயங்களையும் மறத்தலாகாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பெருமபாலான முஸ்லிம்களும், தமிழர்களும்
ரனிலை வெற்றிபெறச் செய்வோம் என்றார்கள். தலைவர் மர்ஹூம் அஸ்ரபின்
மறைவுக்குப் பின்பு அவரது பணியை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும்
எங்களுக்குமிருந்தது.
அதனால் தலைவர் அஸ்ரபுக்கு தேவைப்பட்டிருந்தது என்ன? இந்த நாட்டின்
சமாதானமும், மக்களின் நிம்மதியான வாழ்வையுமே அவர் விரும்பியிருந்தார்.
ஆதலால்தான் 2005 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி
மஹிந்தராஜபக்ஸவை தேசிய காங்கிரஸ் ஆதரித்தது.
தற்போதய ஜனாதிபதியின் ஆட்சிக் காலம் விவசாயிகளுக்கு ஒரு பொற்காலமாகும்.
விவசாயிகள் தமது விவசாயங்களை கைவிட வேண்டியதொரு ஆபத்தான சூழ்நிலை ஒரு
காலகட்டத்தில் ஏற்பட்டது.
இந்தவேளையில் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும்
என்பதில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு துணிச்சலான முடிவுகளை எடுத்தவர்
எமது ஜனாதிபதியாவார்.
ஆதலால்தான் இன்று வரை உரமானயிம் மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டு
வருவதுடன், ஒரு போதுமில்லாதவாறு நெல்லுககான உத்தரவாத விலையினையும்
வழங்கியுள்ளார்.
இதே போன்று பாரியளவிலாள நீர்ப்பாசனத்திட்டங்களையும், குளங்களையும்
அபிவிருத்தி செய்துள்ளதுடன் விவசாயப்பாதைகள், நவீன தொழில்நுட்ப முறைகள்
என்பனவற்றையும் இந்த அரசாங்கம் வழங்கி வருகின்றது. மேலும் கடந்த
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக பல மில்லியன் ரூபாய்க்களை
நிவாரனமாகவும் அரசாங்கம் வழங்கி வருகின்றது.
எனவேதான் மக்களும், தலைமைகளும் நாட்டிற்குரிய தலைமையை தெரிவுசெய்வதில்
மிகவும் நிதானமாகவும், புத்திசாதுர்யமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தின் தலைமைகளின் கடந்தகால வரலாறுகளை பார்க்கும் போது
அவ்வாறு நடந்து கொண்டு தமது சமூகத்தை வழிநடத்தியுள்ளார்கள். ஆதலால்தான்
அன்று முஸ்லிம் தலைமைகளை மதித்தார்கள், நம்பிக்கை வைத்தார்கள்;.
அரசர்களும், ஆட்சியாளர்களும் தமக்கான ஆலோசகர்களாக முஸ்லிம்களை
வைத்திருந்ததனையும் காணலாம்.
தொடர்ந்தும் பெரும்பான்மை சமூகத்தின் சந்தேக கண்ணோட்டத்திற்கு முஸ்லிம்
சமூகம் ஆளாக்கப்படக் கூடாது. எதிர்வருகின்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ வெற்றி பெறுவது உறுதியாகும்.
ரனிலினால் ஒரு போதும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரமுடியாது. ஆதலால்தான்
ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தலிலும் பலிகொடுப்பதற்காக ஒருவரை அழைத்து வருவது
ரனிலின் யுக்தியாக மாறியுள்ளது.
பல்லின சமூகங்கள் வாழுகின்ற ஒரு நாட்டில் இனக்கலவரங்கள் ஏற்படுவதற்கான
சந்தர்ப்பங்கள் உள்ளன. இன்று அமெரிக்காவிலும் கூட பாரிய போராட்டங்களும்,
கலவரங்களும் இடம் பெற்றுவருவதை காண்கின்றோம்.
இனவாதம் பற்றி கூறுபவர்கள் இனவாதிக இருக்க முடியாது. இனவாதத்தினால் இனவாதத்தை ஒரு போதும் ஒழிக்க முடியாது.
பிரச்சினைகள் அனைத்து சமூகங்களுக்கும் இருக்கின்றன. அவைகளை தலைமைகள்
பூதாகரமாக காட்ட முனைவது பேரினவாதிகளுக்கு நல்ல சந்தர்ப்பங்களாக அமைகின்றன
என்றார்.(mm)

0 Comments:
Post a Comment