எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத
இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்
வெளிவந்த பின்னரே எந்தவொரு முடிவையும் தாம் எடுக்கவுள்ளதாகவும் இலங்கை
தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக மாவை சேனாதிராசா
தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
'எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று நாம் இன்னும்
தீர்மானிக்கவில்லை. இந்த மாத இறுதியில் நாம் எமது முடிவை அறிவிப்போம்.
தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள்
வெளிவந்த பின்னர் அது குறித்து நாம் தீர்மானிப்போம்' என்றார்.

0 Comments:
Post a Comment