மகிழடித்தீவு மெதடிஸ்த திருச்சபையின் சமூக ஒன்றிணைந்த நத்தார் விழா
மட்டக்களப்பு மாவட்டம் மகிழடித்தீவு மெதடிஸ்த திருச்சபையின் ஏற்பாட்டில் மகிழடித்தீவு மெதடிஸ்த ஆலயத்தில் சமூக ஒன்றிணைந்த நத்தார் விழா நேற்று (06) சனிக்கிழமை இடம்பெற்றது.
சாம் சுபேந்திரன் சேகர முகாமைக்குரு, புளியந்தீவு சேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சேகர பணியாளர்கள், முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன், மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை, மகிழடித்தீவு கிராமசேவை உத்தியோகத்தர் க.சுவேந்திரன், டொக்டர் கே.பன்னீர்செல்வம் திருச்சபையின் உறுப்பினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது முதலைக்குடா மகா வித்தியாலய அதிபர் சி.அகிலேஸ்வரன், மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலய அதிபர் பொ.நேசதுரை, மகிழடித்தீவு கிராமசேவை உத்தியோகத்தர் க.சுவேந்திரன், டொக்டர் பன்னீர்செல்வம் ஆகியோரின் சேவைகளைப் பாராட்டி திருச்சபையினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும், மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டதோடு, சிறுவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
0 Comments:
Post a Comment