“எங்கு எதைப் பெற்றுக் கொள்ள முடியுமோ அங்கு அதை பெற்றுக் கொண்டு எமது தேவைகளை மேம்படுத்திக்கொள்வதுதான் இன்றய காலத்தில் புத்திசாலித்தனமான செயற்பாடாகும். தென் பகுதி மாணவர்களுடன் ஒப்பிடுகையில் தற்போதும் எமது பகுதி மாணவர்கள் பலகுறைபாடுகள் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர். ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது பகுதி மாணவர்களும் ஏனைய மாணவர்களைப் போல் தலைசிறந்தவர்களாக பிரகாசிக்க வேண்டும் என்ற நோக்குடன் தான் இத்தகைய அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார் - என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய கே.வி.குகேந்திரன் (வி.கே.ஜெகன்) தெரிவித்துள்ளார்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலையின் செயற்பாட்டு மண்டபத்தை (04.12.2014) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையில் ஒருங்கிணைப்பாளர். வி.கே.ஜெகன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..
பாடசாலை அதிபர் த.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மண்டபத்தை திறந்து வைத்து வி.கே.ஜெகன் தொடர்ந்து உரையாற்றுகையில் நீண்டகாலமாக எவரது கண்களுக்கும் படாதிருந்த இப் பாடசாலையானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது பார்வைபட்டதன் காரணமாகத்தான் இன்று ஒரு புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.
இப் பாடசாலையினது தேவைகள் எதுவானாலும் தீர்த்து வைப்பதற்கும் மாணவர்களது கல்வியை மேம்படுத்துவதற்கும் தமது கட்சி என்றும் தயாராகவே உள்ளது.
வறுமையான மாணவர்கள் அதிகம் கல்விகற்கும் இந்தப் பாடசாலையானது அநேக தேவைகளை எதிர்பார்த்துத்தான் இருக்கின்றது. இப்பாடசாலையின் தேவைகள் எதுவானாலும் எமது பார்வைக்கு கொண்டுவரப்படுமேயானால் நிச்சயமாக அவை அனைத்தையும் அமைச்சரது கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு பூர்த்திசெய்து தருவதற்கு தயாராகவே இருக்கின்றோம்.. கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பாடசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மூலம் பல்வேறுபட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதபர் தெரிவித்துள்ளார். இருந்தும் இதை விட அதிகளவான தேவைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.
மாணவர்களது கல்வி வளர்ச்சி எவ்வளவு விருத்தியடைகின்றதோ அவ்வளவிற்கு எமது சமுதாயமும் மேம்பாட்டைந்து செல்லும். இதை ஏற்படுத்திக் கொள்வதற்கு எதிர்கால சிந்தனையுள்ள அனைவரும் முன்வருவார்களேயானால் எமது தேசம் மிகச்சிறந்த கல்விமான்களை உருவாக்கிக் கொள்ளும் - என்றார்.
இந் நிகழ்வில் நல்லூர் தொகுதி அமைப்பாளர் ரவீந்திரதாசன்இ சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் திருக்குமரன் ஆகியோருடன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள்இ மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்இ
0 Comments:
Post a Comment