8 Dec 2014

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பது தொடர்பாக் தமிழ் அரசியல் தலைவர்கள் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் - வீ.ஆனந்தசங்கரி

SHARE
எமக்கு தற்போதைய நிலையில் தேவையாக உள்ளது எமது இந்த நாடு சுதத்திரமாக இயங்குவதாக இருக்க வேணடும் ஜனாநாயக உரிமைகள் மக்களுக்குக் கிடைக்கப் பெறவேண்டும். எல்லோரும் இலங்கை மக்கள் என்ற நிலைப்பாட்டில் வாழ வேண்டும் என்ற நிலைப்பாடுதான் தேவையாகவுள்ளது. இதனை தற்போதிருக்கின்ற அரசாங்கம் செய்கின்றது என இந்த அரசாங்கம் சொல்கிறது.

என தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
வர இருக்கின்ற ஜனாதிபதித் தேதலில் தமிழ் மக்கள் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என இன்று அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்…

இவ்விடையம் தொடர்பில் அவர் மெலும் கூறுகையில்….. 


வரஇருக்கின்ற  ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தலைவர்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.


யாராக இருந்தாலும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்குமைய  இன மத பேதமின்றி மக்களுக்காக நல்லாட்சியைத் செய்ய கூடிய ஒருவருக்கு நாம் வாக்களிக்க வேண்டும். இதுதான் எனது நிலைப்பாடாகும். இதனை மஹிந்த ராஜபக்ஸ செய்வார் என்று நினைத்தால் அவருக்கு வாக்களிக்கலாம் அல்லது மைத்திரிபால சிறிசேன செய்வார் என்று நினைத்தால் மைத்திரிக்கு வாக்களிக்கலாம்.


எனவே வரஇருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழ் மக்கள் வாக்களிப்பது தொடர்பாக மூத்த தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்து எமது தமிழ் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.


இருந்தாலும் எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள்  எவ்வாறு நடந்து கொள்வது என்பது தொடர்பாக மக்கள் தாமாகவும் தற்போது  முடிவெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: