8 Dec 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சர்வதேச நீதி மன்றத்திக்குக் கொண்டு சென்றால் அதனை எதிர்த்து தீக்குளிப்பேன் -சங்கரெத்தின தேரர்.

SHARE
இந்த நாட்டிலே நடைபெற்ற யுத்தத்தினை சர்வதேச நீதி மன்றத்திக்குக் கொண்டு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், இலங்கை இராணுவத்திற்கும், தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றார்கள். இவ்வாறான நிலமை வருமாக இருந்தால் அதனை எதிர்த்து தீக்குளிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.


இவ்வாறான செயற்பாட்டிற்கு நான் ஒரு மத குரு என்ற ரீதியில் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். அவ்வாறான நிலை வந்தாலும் அதனை எதிர்த்து தீக்குளிக்கும் முதலாவது மதத் தலைவர் நானாகத்தான் இருக்கு என கல்முனை சுபத்திராராம விகாராபதிபதி ரண்முத்துக்கல சங்கரெத்தின தேரர் கூறினார்.


நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்படி தேரரிடம் இன்று ஞாயிற்றுக் கிழமை (07) வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்….


இவ்விடையம் தொடர்பில் தேரர் மேலும் தெரிவிக்கையில்…….


இந்த நாட்டில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடப்போவது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதான் இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் எந்த வேறுபட்ட கருத்துக்களுக்கும் இடம் கிடையாது.


கடந்த காலங்களில் கிழக்கு மாகாணம் யுத்த சூழலில் இருந்தது. அந்த நிலமைகள் பற்றி கிழக்கிலுள்ள அனைத்து மக்களுக்கும் நன்கு தெரியும்.  கிழக்கில் காணப்பட்ட யுத்த சூழலை இல்லாதொழித்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தியவர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதான் என்பதுவும் மக்களுக்கு நன்கு தெரிந்த விடையம். எனவே இந்த விடையத்தை கிழக்கிலுள்ள மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது.


வரஇருக்கின்ற ஜனாதிதித் தேத்திலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையில் எதுவித தீர்மானமும் எடுக்காமலிருப்பதானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  சுயநலத்திற்காகத்தான்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைக்கும் கோரிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிறைவேற்றித் தரமாட்டாரோ என்ற சந்N;தாகம் அவர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்குத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரதவளிக்க வேண்டும் என்பதை நான் தெரிவிக்க விரும்பகின்றேன். முஸ்லிம் மக்களுக்கு ஒரு நல்ல நிலமையினை எற்படுத்துக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதான்.



தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேத்தல் தொடர்பில் அவர்களது அரசியல் சுயலாபத்தினைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றார்களே தவிர தமிழ் மக்களைப் பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.


தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளிலே உள்ளவர்களுடன் தொடர்புகளைக் கொண்டு வெளிநாட்டு டொலர்களுக்குக் கட்டுப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஏதும் கதைத்தால் வெளிநாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தப்பாக நினைத்து விடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நினைக்கின்றார்கள்.


தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்க வேண்டும் என தமிழ் கூட்டமைப்பு சிந்திப்பதில்லை. தமிழ் மக்களுக்குரிய தீர்வுகள் எட்டப்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பலமான சக்திகள் இதுவரை உருவாக்கப் படவில்லை.


ஜனாதிதபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளரை ஆதரித்தால் எதுவித நன்மையும் கிடைக்கப் போவதில்லை ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸதான் பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற ஒரு மேடைய உருவாக்கியுள்ளார்.


எனவே கடந்த காலங்களில் கிழக்கிலே காணப்பட்ட யுத்த சூழல் மீண்டும் தேவையா? கிழக்கில்  அபிவிருத்திகள் தேவை இல்லையா? நிம்மதியான வாழ்க்கை இங்குள்ள மக்களுக்குத் தேவையில்லையா? இவைகள் அனைத்தினையும் சிந்தித்து எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கிலுள் அனைத்து மக்களும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வாக்களிக்க வேண்டும் அவ்வாறு வாக்களிக்கா விட்டால் அது இந்த நாட்டுக்குச் செய்யும் துரோகமாகும்.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 2005 ஆம் ஆண்டு இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்றபோது இந்த நாட்டு மக்கள் அவரிடம் அபிவிருத்தி கேட்க்க வில்லை, நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை நிறுத்தித்தருமாறு தான் கேட்டார்கள்.  அதற்கு ஏற்றார்போல் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது, மாதிரமல்லாமல் பாரிய அபிவிருதிகளையும் மேற்கொள்ளப் பட்டுள்ளன.



ஆகவே வரஇருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலானது எமது நாட்டு மக்களுக்கு மேலும் நல்ல யுகத்தினை உருவாக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமாகும். அதற்காக வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில்  இருக்கின்ற அபிவிருத்திகள் வேறு எந்தவொரு தலைவர் வந்தலும் முன்நெடுக்க முடியாது. இதனை கிழக்கிலுள்ள மக்கள இனமத பேதமின்றி உணர்ந்து செயற்பட வேண்டும்.


எனவே கிழக்கிலுள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைகோர்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு முன்வர வேண்டும். என அவர் மேலும் கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: