30 வருடங்களுக்குப் பின்னர் தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீர்மானிக்கின்ற சந்தர்ப்பமாகவே வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தர் பார்க்கப் படுகின்றது – மாசிலாமணி
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற பட்டிருப்பு தேர்தல் தொகுதியானது இலங்கையிலேயே பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு தேர்தல் கொகுதியாகும் கடந்த ஜனாதிபதித் தேத்தலில் இத்தொகுதியில் 87.5 வீதம் வாக்குகள் அளிக்கப்பட்டன. அதுபோல் எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேத்தலில் பட்டிருப்புத் தொகுதியில் 90 வீதமாஷன வாக்குகள் அளிக்கப்படும் என எதிர் பார்க்கின்றோம்.
என ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் ஏ.ரி.மாசிலாமணி கூறினார்.
வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மிறறர் இணையத்தளம் இன்று புதன் கிழமை (03) ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் ஏ.ரி.மாசிலாமணியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்
இவ்வியைடம் தொட்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…..
“பேதங்களை மறப்போம் ஒன்றுபடுவேம் மாற்றத்தைக் கொண்டுவருவோம்” என்ற எமது மகுட வாக்கியத்தைக் கருத்தில் கொண்டு வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள இருக்கின்றோம்.
எம்மவர்கள் மத்தியில் எந்த விதமான பேதங்கள் காணப்படினும் அவைகள் அனைத்தினையும் கழைந்து விட்டு ஒற்றுமையுடன் மாற்றத்தினைக் கொண்டு வரவுள்ளோம்.
30 வருடங்களுக்குப் பின்னர் தமிழர்களின் தலைவிதியை தமிழர்களே தீர்மானிக்கின்ற சந்தர்ப்பமாகவே நாம் வர இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலைப் பார்க்கின்றோம்.எனவே எமது மக்கள் இச்சந்தர்ப்பத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டால் இதுபோலொரு சந்தர்ப்பம் இனிமேல் கிடைக்குமோ என தெரியாது. அதிலும் பட்டிருப்புத் தொகுதி மக்கள் இவற்றுக்காக அதி கூடிய ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என எதிர் பார்க்கின்றோம்.
இது இவ்வாறு இருக்க எம்மை இனந்தெரியாத நபர்களும் பின்தொடர்ந்து கொண்டு நோட்டம் இட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள். எதற்காக எம்மைக் கண்காணிக்கின்றார்கள் எனத் தெரியாதுள்ளது. இந்த வித்தில் எமது மக்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டியுள்ளது.
என்னையும் எனது செயற்பாடுகளையும் தினமும் இனந் தெரியாத நபர்கள் பின்தொடர்ந்து கண்காணித்து வருகின்றார்கள். இது எமக்கு விடும் ஒரு அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம். இருப்பினும் எம்மை யாராலும் அடக்க முடியாது.
தற்போதிருக்கின்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்தும் பட்டிருப்புத் தொகுதி தட்டிக் கழிக்கப் பட்டுக் கொண்டேதான் வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த அரசாங்கத்தினால் தேர்தலுக்காகவேண்டி சில லேலைத்திட்டங்கள் முன்நெடுக்கப் பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எவரும் வேண்டுமென்றே போய் சேரவில்லை பலாத்காரமாகத்தான் அனைவரும் இழுத்துச் செல்லப்பட்டார்கள். ஆனால் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் பலர் கை, கால், இல்லாமல் அங்கவீனமாக்கப் பட்டுள்ளார்கள். இவர்களைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் இந்த அரசாங்கத்தில் தற்போது உள்ளார்கள், இவ்வாறான அங்கவீனர்களைக்கூட இந்த அரசாங்கம் இதுவரையில் கவனிக்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகளவு கல்வி மான்களையும், அதிகாரிகளையும் கொண்டது. பட்டிருபுத் கொகுதிதான் ஆனால் இதுவரையில் இத் தொகுதியின் கீழுள்ள படுவான்கரையில் ஒரு தேசிய பாடசாலையும் அமையப்பெறவில்லை.
எந்த வித தொழில் பேட்டைகளும் பட்டிருப்புத் தொகுயில் இல்லமலுள்ளது.
எமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் முன்நெடுக்கப்பட்ட திட்டங்கள்தான் தற்போதும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
இதனைவிட எதிர் காலத்தில் கிழக்குப் பல்கலைக் கழத்தில் பொறியியல் பீடம் அமைத்தல், பாரிய தொழில் பேட்டைகள் அமைத்தல், வாழ்வாராம அபிவிருத்தியை மேம்படுத்தல், தேசிய பாடசாலைகளை உருவாக்குதல், போன்ற பல செயற்றிட்டங்கைள நாம் மேற்கொள்ளவுள்ளோம்.
எமது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தால் மட்டக்களப்பு மாவட்டதிலே இருக்கின்ற வாழைச்சேன காகித ஆலை, கிழக்குப் பல்கலைக் கழகம், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, இந்துக் கல்லாரி, போன்றன உருவாக்கப் பட்டதாகும்.
எனவே கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் பட்டிருப்புத் தொகுதியில் அதிகளவு தேர்தல் வன்முறைஙகள் இடம்பெற்றன. அவற்றினை விட இம்முறை வருகின்ற ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறான வன்முறைகள் அதிகம் காணப்படலம் என கருதுகின்றோம்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு எமது தமிழ் மக்கள் வர இருக்கின்ற தேர்தலில் உணர்வு பூர்வமக வாக்களிக்க வேண்டும். இது இந்த உலகிற்குத் தெரிய வேண்டும் இதற்கு பட்டிருப்புத் தொகுதி மக்கள் எடுத்துக்hகட்டாக அமைய வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment