21 Dec 2014

பஸ் விபத்தில் குழந்தை பலி எண்மர் படுகாயம்

SHARE
ஏ.எச்.ஏ. ஹ{ஸைன்-

20.12.2014 சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு மூதூர் சந்தியில் இடம்பெற்ற பஸ் மரத்துடன் மோதிய விபத்தில் ஐந்து வயதுக் குழந்தை ஸ்தலத்தில் மரணமானதுடன் பஸ்ஸில் பயணித்த எட்டுப் பேர் படுகாயங்களுக்குள்ளானதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பலியான குழந்தை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையைச் சேர்ந்த ஜெயப்பிரதீப் மயூரேஸ் (வயது 5) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த சாரதி உட்பட எட்டுப்பேரும் உடனடியாக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது பலியான குழந்தையின் தந்தை ஜெயப்பிரதீப் படுகாயமடைந்த நிலையில் அவசர சத்திர சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மூதூர் வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் சுமார் இருபது 30 பேர் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக சுற்றுலாச் சென்று மீண்டும் மட்டக்களப்புக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் மட்டக்களப்பு-மூதூர் சந்தியில் மேற்படி தனியார் பஸ் மரத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்ததாக சுற்றுலாச் சென்றவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
SHARE

Author: verified_user

0 Comments: