மட்டக்களப்பு மாவட்டதில் தொடர்ந்து கடந்த 5 தினங்கள் மழை பெய்து வருகின்றது. இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தழம்பல் ஏற்பட்டுள்ளதுடன் பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தினால் பல கிராமங்களின் உள் வீதிகளின் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வீதிகளை ஊடறுத்தும் வெள்ளநீர் பாய்வதனால் பிரதான போக்குவரத்துக்களிலும் சிரமம் ஏற்பட்டுள்ளன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 64984 குடும்பங்களைச் சேர்ந்த 241133 நபர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
மேலும் மாவட்டத்திலல் 2919 குடும்பங்களைச் சேர்ந்த 99042 நபர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மாவட்டத்தின் ஆங்காங்கே காணப்படுகின்ற பொதுக்கட்டிடங்களில் 49 நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றினைவிட 17042 குடும்பங்களைச் சேர்ந்த 59969 நபர்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து அவர்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும், நலம்பரி நிலையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ள மக்களுக்கு உரிய பிரதேச செயலகங்கள் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப் பட்டு வருவதாகவும், மேற்படி மட்டக்களப்பு மாவட்ட அர்தத முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (21) பெய்த மழை வீழ்ச்சியின் விபரங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையத்துடன் பலமுறை தொடர்பு கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.
இந்நிலையில் உன்னிச்சைக் குளம் 31 அடி 3 இஞ்சி, வாகனேரிக்குளம் 20 அடி 10 இஞ்சி, தும்பங்கேணிக்குளம் 17 அடி 6 இஞ்சி, கித்துள்வௌக்குளம் 9 அடி 5 இஞ்சி, கட்டுமுறிவுக்குளம் 12 அடி 1 இஞ்சி, உறுகாமம் குளம் 18 அடியும், நவகிரிக்குளம் 31 அடியும், 7 இஞ்சி, வெலிக்காக் கண்டிக்குளம் 16 அடி 5 இஞ்சியும், வடமுனைக்குளம் 14 அடியும், நீர் மட்டம் உள்ளதாகவும்,
உறுகாமம் குளத்திலிருந்து 28 இஞ்சி அளவு மேலதிக நீரும், வாகனேசிக் குளத்திலிருந்து 20 இஞ்சி மேலதிக நீரும், தும்பங்கேணிக் குளத்திலிருந்து 3 இஞ்சி மேலதிக நீரும், கட்டுமுறிவுக் குளத்திலிருந்து 7 இஞ்சி மேலதிக நீரும், நவகிரிக் குளத்திலிருந்து 8.5 இஞ்சி மேலதிக நீரும், வெலிக்காக்கண்டிக் குளத்திலிருந்து 12 இஞ்சி மேலதிக நீரும், வெளியேறுவதாகவும், அந்தக் குளங்களுக்குப் பெறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் பிரதான வீதியின் பிள்ளையாரடி, மற்றும் மன்னம்பிட்டி போன்ற இடங்களில் வெள்ள நீர் ஊடறுத்துப் பாய்கின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment