21 Dec 2014

மட்டக்களப்பில் இன்று நண்பகல் வரை மழை முற்றாக ஓய்ந்துள்ளது கே. சூரியகுமாரன்

SHARE
-ஏ.எச்.ஏ. ஹ{ஸைன்
கடந்த சில தினங்களாக இருந்து வந்த சீரற்ற கால நிலை இன்று 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை காலையிருந்து நண்பல் வரை சீரடைந்திருப்பதாக மட்டக்களப்பு வளிமண்டலவியல் அதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

நேற்று இரவு 8.30 மணியிலிருந்து தொடங்கி இன்று காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 142.07 மில்லி மீற்றர் மழை பதிவானதாகவும், ஆனால் காலை எட்டரை மணியிலிருந்து நண்பகல் வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் மழை பெய்யவில்லை என்றும் வளிமண்டலவியல் அதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.

இன்று காலையிலிருந்து வெயில் எறித்ததால் மக்கள் தமது அன்றாட அலுவல்களில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.
SHARE

Author: verified_user

0 Comments: