11 Dec 2014

அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக. எண்ணில் அடங்காத சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது - உதயகுமார்

SHARE
நாங்கள் தமிழர்கள் நாங்கள் அறிவுபடைத்தவர்கள் என்று உலகத்திற்கே காட்டி இருக்கின்றோம் இருந்தும் சிலவேளைகளில் தவறு விடுகின்றோம். ஒருவர் எமக்கு உதவி செய்தால் அதற்கு பரிகாரமாக சந்தர்பம் வரும்போது மீண்டும் பிரதியுபகாரம் செய்ய வேண்டும் என போரதீவுப் பற்று பிரதேச திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் க. உதயகுமார் தெரிவித்தார்


வாழ்வின் எழுச்சித்திட்ட பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்காக 2500 ரூபாய் ஆரம்பக்கட்ட மானியக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை மட்.திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலய ஒன்று கூடல் மட்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் கருத்தத் தெரிவிக்கையில்.

சுமூரத்தி திட்டமானது பலசலுகைகளை மக்களுக்கு செய்வதற்காகவும்  மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும். தற்போதைய அரசாங்கம் இதனை திவிநெகும திணைக்களமாக மாற்றியது. அவ்வாறு மாற்றப்பட்டு மக்களுக்கு எண்ணில் அடங்காத சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. அதற்கு அமைவாக விடுகளைத் திருத்துவதற்காக 2500 ரூபாய் ஆரம்பக்கட்ட  மானிய கொடுப்பனவு 7624மேற்பட்ட கும்பங்களுக்கு போரதீவுப் பற்று பிரதேச செயலக பிரிவிலே வழங்கப்பட்டுள்ளது.


நாங்கள் தமிழர்கள் நாங்கள் அறிவுபடைத்தவர்கள் என்று உலகத்திற்கே காட்டி இருக்கின்றோம் இருந்தும் சிலவேளைகளில் தவறு விடுகின்றோம். ஒருவர் எமக்கு உதவி செய்தால் அதற்கு பரிகாரமாக சந்தர்பம் வரும்போது மீண்டும் பிரதியுபகாரம் செய்ய வேண்டும். என்தில் எமது தமிழ் மக்கள் அக்கறையாக இருப்பவர்கள் அந்த வகையில் இந்த அரசாங்கம் உங்களுக்கு பல சேவைகளையும் சலுகைகளை செய்திருக்கின்றது.

எனவே உதவி செய்தவர்களுக்கு பிதியுபகாரம் செய்யவேண்டிய தேவையுள்ளது.

எங்களுடைய ஐனாதிபதி அவர்களினால் இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்திலே சமூர்த்திக் கொடுப்பனவு என்றும் இல்லாதவாறு அதிகரிக்கப் பட்டுள்ளது இது மக்களுக்குக்  கிடைத்துள்ள பாரிய சலுகையாகும்.

இவ்வாறு சலுகைகளைப் பெறுகின்ற நாங்கள் இவற்றிக்கு பிரதியுபகாரமாக எதனை மேற்கொள்ளப் போகின்றோம் என்பதனை அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும்.

இதற்கு கைமாறு செய்வதற்குரிய காலம் ஒன்று வருகின்றது அதற்கு நீங்கள் கைமாறு செய்வதன் மூலம் மீண்டும் கூடுதலான சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனவே நீங்கள் அறிவு பூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: