17 Dec 2014

சிகை அலங்கார நிலையத்தை நடத்திவந்தவர் அங்கிருந்து சடலமாக மீட்பு

SHARE
ஏறாவூர் நகரிலுள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்று மூடப்பட்டிருந்த நிலையில் இந்த சிகை அலங்கார நிலையத்தை நடத்திவந்தவர் அங்கிருந்து  செவ்வாய்க்கிழமை (16)  இரவு   சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

பங்குடாவெளி தளவாய்க் கிராமத்தில் வசிக்கும் 66 வயதுடைய செல்லத்துரை வேல்முருகு என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

தனது கணவர் நேற்றையதினம் (16) முற்பகல் 11 மணியளவில் தங்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகவும்  பின்னர் மாலையாகும் வரை தொடர்பு இல்லாதிருந்தது. இதனால்  தாங்கள் கடைக்கு வந்து பார்த்தபொழுது கடைக்குள் அவர் இறந்த நிலையில் காணப்பட்டதாக மனைவி பொன்னையா மாணிக்கம் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

தனது கணவர் அவருக்கு ஏற்பட்ட நீண்ட நாள் உடல் உபாதைக்காக இன்று கிளினிக் செல்லும் நாள் என்றும் என்றும் மனைவி பொன்னையா மாணிக்கம் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்
SHARE

Author: verified_user

0 Comments: