தமது கட்சி சார்பாக தேர்தல் பொதுக் கூட்டங்களை நடாத்துவதற்கு உரிய இடங்களைப் பெறுவதில் பலசிரமங்களை எதிர் கொள்வதாக ஐக்கிய தேசிக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டஅமைப்பாளர் அ.சசிதரன் இன்று புதன் கிழமை தொடர்பு கொண்டு கூறினார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்து தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களை நடாத்துவதங்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
எமது கூட்டத்திற்கு மட்.இந்துக் கல்லூரி மைதானத்தினைக் கேட்டு உரிய பாடசாலை அதிபரிடம் கோரியிருந்தோம், ஆனால் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகம் அதற்குரிய அனுமதியினை மறுத்துள்ளது.
ஆளும் கட்சியின் தேர்தர் பிரச்சார நடவடிக்கை ஒன்று நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளதாகவும் அதற்கு மட்.இந்துக் கல்லூரி நிருவாகமும், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் அனுமதி வழங்கியுள்ளதாக அறிகின்றோம்.
இந்நிலையில் மட்.சிவானந்தா விளையாட்டு மைதானத்தினை அந்த பாடசாலை அதிபரிடம் கேட்டபோது குறித்த மைதானத்தில் அரசியல் கூட்டங்கள் நடாத்துவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாக அவருக்கு அறிவறுத்தல் வழங்கப் பட்டுள்ளதாக மட்.சிவானந்தா வித்தியலய அதிபர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரில் பொதுவாக விளையாட்டு மைதானங்கள் பாடசாலை, வலயக்கல்வி அலுவலகம் போன்ற நிருவாகத்தன் கீழ் உள்ளதனால் எமது கட்சி சார்பாக தேர்தல் பொதுக் கூட்டங்கைள நடாத்துவதற்கு இடங்கள் பெறுவதில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் பாராபட்சம் காட்டி வருகின்றது.
இந்த விடையம குறித்து இன்று புதன் கிழமை (17) மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் கவனத்திற்கு நாம் கொண்டு வந்தோம்.
அரசாங்க அதிபர் இவ்விடையத்தினை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள விளையாட்டு மைதானங்களை தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களுக்கு வழங்குவதாக இருந்தால் ஆளும் கட்சிக்கு மாத்திரமின்றி எதிர் கட்சியினருக்கும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கமைய எமது தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்களை நடாத்துவதற்கு மட்டக்களப்பு நகரில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட விளையாட்டு மைதாங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என நம்பிக்கை வந்துள்ளது.
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக அதிகாரிகாரியின் செயற்பாடானது மிகவும் கவலையளிக்கின்றது. ஒரு அரச அதிகாரி பக்கச் சார்பற்ற முறையில் நடந்து கொள்ளவேண்டும். இருந்த போதிலும் மட்டக்கயப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இந்த விடையத்தில் பக்கச்சார்பு இல்லாமல் நடந்து கொள்கின்றார். தேர்தல் நடை பெற்று முடியும் வரை அரசாங்க அதிபர் இவ்வாறு பக்கச் சார்பு இல்லாமல் நடந்து கொள்வார் என எதிர் பார்ப்பதாகவும், அதற்காக வேண்டி இறைவனைப் பிரார்திப்பதாகவும் ஐக்கிய தேசிக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அ.சசிதரன் மேலும் கூறினார்

0 Comments:
Post a Comment