12 Dec 2014

தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்தால் ஜனாதிபதி மஹிந்தவையே ஆதரிப்பார்!

SHARE
எமது பெரும் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
பொத்துவிலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள மக்களின் பெரும்பாலான வாக்குகளால் வெற்றி பெருவார்.
ஆசியாவின் ஆச்சர்யம் மிக்க நாயகனாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கின்றார். அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளது.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கை உயர்வடைந்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.
கொடூர யுத்தத்தை ஒழித்தது மட்டுமல்லாமல் வருமானம் குறைந்த மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் பல அபிவிருத்தி திட்டங்களை ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினறும் வெளிநாட்டு சக்திகளும் கபட நாடகம் ஆடுகின்றனர். இதை ஒருபோதும் மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்.
மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் அவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பார்’” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.(mm)
SHARE

Author: verified_user

0 Comments: