ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிடும் மைதிரி சிறிசேனவை ஆதரிக்கும்
வகையில் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் தேர்தல்
நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச பலநோக்கு கூட்டுறவுச் சங்க கூட்ட
மண்டபத்தில் பொது வேட்பாளராக போட்டியிடும் மைதிரியை ஆதரித்து இன்றுமாலை
ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் அட்டாளைச்சேனை
பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் கடமையாற்றுகின்றவர்கள் மைதிரியின் தேர்தல்
தொடர்பான விளம்பர போஸ்டர்களை காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபடுகின்றவர்கள் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதி தீவிர போராளிகள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.(ml)
0 Comments:
Post a Comment