13 Dec 2014

பொலிஸ் அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

SHARE
திருகோணமலை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் 30 பொலிஸ் அதிகாரிகளுக்கு, ஜனாதிபதியின் மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தின் கீழ்,  மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.

திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (06)  காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

சிரேஷ்ட பொலிஸ்  அத்தியட்சகர் மார்க் அன்ரனி தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  கபில ஜெயசேகர, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் ஆகியோர் இவற்றை வழ்ங்கி வைத்தனர்.
SHARE

Author: verified_user

0 Comments: