13 Dec 2014

அனர்த்தக் குறைப்புதொடர்பானவரைபடம்

SHARE
மட்டக்களப்பு ஒக்பாம் ஐரீ பீநிறுவனத்தின் ஏற்பாட்டில் ஆரையம்பதி மண்முனைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாழங்குடா வேடர்  குடியிருப்பு ,காங்கேயன்ஓடை,செல்வநகர்  ஆகியபிரிவுகளில்  அனர்த்த குறைப்பு தொடர்பான வரைபடம் தயாரிக்கும் செயற்பாடு பங்குதாரர் நிறுவனமான செழுமை நிறுவனத்தின் ஒருங்கமைப்பில் அமைப்பின் இணைப்பாளர்  பாலகங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
இதன் போது ஒக்பாம் நிறுவனத்தின் இலங்கைக்கான தேசியபணிப்பாளர்  அசாட் மொகமட் அசாடுசமன், வடக்குமாகாணதிட்டமுகாமையாளர்  லாபீர் மொகமட்  ஒக்பாம் ஐ ரீ பீ நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் எஸ்.ராமகிருஸ்ணமூர்த்தி ,ஒக்பாம் வவுனியா நிறுவனத்தின்  திட்டஉத்தியோகத்தர்  ஏ.யூகேன்,திட்ட இணைப்பாளர் ஐனா கலந்து கொண்டதுடன்  பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளர்கள், கிராமசேவகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்படபலரும் கலந்துகொண்டமைகுறிப்பிடத்தக்கது.
 
SHARE

Author: verified_user

0 Comments: