தற்போது பெய்துவரும் மழை காரணமாக கல்முனை பொதுச்சந்தை சேறும் சகதியுமாக
காணப்படுவதால் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமது அன்றாட
வர்த்தகத்தில் ஈடுபட முடியாது பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக
கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார்.
கல்முனை பொதுச்சந்தை மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவதால் வர்த்தகர்கள்
தமது பொருட்களை விற்பனை செய்துகொள்ள முடியாது நஷ்டத்தை எதிர்நோக்கி வருவதை
பல தடவைகள் அவ்வப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முதல்வர்களின்
கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் அனைவரும் வர்த்தகர்களை ஏமாற்றி
வருகின்றனர்.
இதேவேளை கல்முனை பொதுச்சந்தை வர்த்தகர்கள் வருடந்தோறும் சுமார் 80
இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியை கல்முனை மாநகர சபைக்கு வரியாக செலுத்தி
வருகின்றனர். இந்நிதியிலிருந்து வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாவையேனும்
கல்முனை பொதுச்சந்தையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு
பயன்படுத்துவதில்லை எனவும், கல்முனை பொதுச்சந்தையில் காணப்படும் மலசலகூடம்
நிரம்பி வழிவதுடன் துர்நாற்றமும் வீசிவருகின்றது. அதனால் வர்த்தகர்கள்
படும்வேதனையை வெளியில் சொல்ல முடியாது திண்டாடி வருவதாகவும் கவலை
தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment