மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி அதிகாரிகள் தாங்களும் அரசியல்வாதிகளாக மாறி ஆளும் கட்சியினரை திருப்திப்படுத்துவகையில் செயற்படுகிறர்கள் என மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
நீங்கள் நம்பிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் ஜனவரி மாதம் 8ஆந் திகதி மக்களால் நிராகரிக்கப்படலாம் அவர்களுடன் ஒட்டிக்கொண்டு திரிபவர்களின் நிலை என்னவாகும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் அதிகாரிகளாகிய நீங்கள் மேலும் மேலும் பதவி உயர்வுகளைப் பெற்றுச் செல்லக்கூடியவர்கள் அரசியலில் மாற்றம் வந்தாலும் அதிகாரிகள் எப்பவும் அதிகாரிகள் தான் நீங்கள் தங்கள் கௌரவத்தைக் காப்பாற்றும்வகையில் கடமைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மட்டக்கப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்ப்பற்று 2 கல்விக் கோட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாயவர்களைக் கொரவிக்கும் நிகழ்வு செங்கலடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
கோட்டக்கல்வி அதிகாரி பொ.சிவகுரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தொடரந்து உரையாற்றுகையில்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த சூழ்நிலை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மேற்கு வலயத்தில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வுகளில்; மாணவர்களின் கல்வியிலுள்ள அக்கறை காரணமாக வலயக் கலவிப் பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டு தமது பிரதேச பாடசாலைகளுக்குத் தேவைகளை எம்மிடம் தெவிவிப்பார்கள் எங்களால் இயன்றவரை உதவிகளை பெற்றுக்கொடுப்போம். இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ள மாணவர்கள் கௌரவிக்க வேண்டும் என வலயக் கல்விப் பணிப்பாளர் என்றிடம் தொடர்பு கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
ஆனால் நான் கல்குடா தொகுதியைச் சேர்ந்தவன் என்ற ரீதியில் கல்குடா கல்வி வலயத்தின் கல்வி செயற்பாடுகளில் மிகுந்த அக்கறையும் செயற்பட முயற்சிகள் மேற்கொள்ளும்போதெல்லாம் கல்குடா வலயக் கல்வி நிருவாகம் ஒத்துழைப்பு வழங்குவதில் பாராபட்சம் காட்டுகிறது.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிப்பது தொடர்பாக ஏற்பாடுகளை செய்துதாருங்கள் என கல்குடா கலய கல்வி நிருவாகத்தினரிடம் பலமுறை கேட்டிருந்தேன். ஆதன் பின்பு கோட்டக் கல்வி அதிகாரிகாரிகளினூடாக ஏற்பாடுகள் செய்துதரப்பட்டது. கல்வி அதிகாரிகள் தமது ஒத்துழைப்புக்களை வழங்கும் போது நாங்களும் பல் உதவிகளைச் செய்வதற்கு தயாராகவுள்ளோம்.
நான் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் கல்குடா கல்வி வயல அதிகாரிகள் எனது கல்வி உத்துழைப்பு நடவடிகைகளுக்கு அனுமதி வழங்குவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
அரசாங்க அதிகாரிகள் அரசியல்வாதிகளாக மாறக்கூடாது. அதிகாரிகளுக்கு சகல அரசியல் கட்சியும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். தமது பிரதேச கல்வியை எவ்வாறு அபிவிருத்தி செய்யவேண்டும் என்பதனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். கல்வி அதிகாரிகள் ஒவ்வொரு அரசியல் கட்சி சார்ந்து செயற்பட்டால் பிரதேச மாணவர்களின் கல்வியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்து.
மக்கள் நினைத்தல் அரசியல்வாதிகளை ஐந்து வருடத்தில் தூக்கிஎறிந்துவிடுவார்கள். ஆனால் அதிகாரிகள் ஓய்வு பெறும்வரை அதிகாரிகளாக பதவி உயர்வுகளைப் பெற்று செல்லக்கூடியவர்கள்.
தற்போதைய அரசாங்கத்தை நம்பிக்கொண்டு தங்களும் அரசியல்வாதியாகமாறி செயற்படும் கல்குடா கல்வி வலய அதிகாரிகள் ஜனவரி 8ம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் உங்களது நிலை என்ன? என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள்.
நான்பார்த்ததிலே வலயக் கல்வி பணிப்பாளராக இருந்த திருமதி பவளகாந்தன் அவர்கள் எந்த ஒரு அரசியல்வாதிகளுடனும் இந்து செயற்படவில்லை அவரைப் போன்ற அதிகாரிகள் கல்குடா கல்வி வலயத்தில் உருவாகவேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளை உள்ளடக்கிய மத்தி வலயத்தை எடுத்துகொண்டால் கல்வி செயற்பாடுகளில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து செயற்படுவார்கள். அந்த வயலம் தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுத்து முன்னிலையில் திகழ்கிறது.
இந்தவகையில் கல்குடா கல்வி வலயமும் பிரதேச கல்வி தொடர்பான கூட்டங்களுக்கும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கும் தொகுதியிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் இணைத்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment