“ஆரோக்கியமான இலங்கை” எனனும் தேசிய சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் ஜனாதிபதி செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைக்காடு இந்து இளைஞர் அறநெறிப் பாடசாலையில் பிரதேச ஆரோக்கியமான சுகாதாரத்தை கொண்ட ஒரு தேசத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளில் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மகிழடித்தீவு பொது
ச் சுகாதார பரிசோதகர் பி.சபாநாதன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
இதன்போது மண்முனை தென்மேற்கு பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.பிரபாகரன், இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் த.மேகலா, அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
0 Comments:
Post a Comment