கட்சி தாவிய பிரதேச சபை உறுப்பினருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை…
அம்பறை ஆலயடி வேம்பு பிரதேச சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த வைரமுத்து தியாகராஜா என்பவர் அண்மையில் அரச தரப்புடன் இணைந்து கொண்டமையினால் அவரின் உறுப்புரிமை நீக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்காக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிய ஆலயடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து தியாகராஜாவக்கு இன்று புதன் கிழமை (10) அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
அக்கடித்தில் மேலும் அறிவிக்கப் பட்டுள்ளதாவது.
ஆலயடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் எமது கட்சி சார்பில் போட்டியிருந்தீர்கள் ஆனால் விருப்பு வாக்கின் அடிப்படையில் பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.
உறுப்பினராக இருந்த வடிவேல் துஸ்யந்தன் அவர்களின் மறைவின் பின் முன்னைய பொதுச் செயலாளரின் சிபாhரிசின் அடிப்படையில் குறித்த வெற்றிடத்திற்கு தாங்கள் நியமிக்கபட்டீர்கள். முன்னைய காலங்களில் எமது கட்சியின் கொள்கையுடன் இணைந்து ஏனைய உறுப்பினர்களுடன் ஒத்துழைத்து பிரதேச சபை சிறப்புடன் இயங்குவதற்கு ஒத்துழைத்தீர்கள்.
அண்மைக்காலமாக உங்கள் நடவடிக்கை கொள்கைக்கு முரணாக அமைவதை தகவல்கள் மூலம் அறிந்து கொண்டேன். இதன் உச்ச நிகழ்வாக கடந்த 2014.11.28ம் திகதி இடம்பெற்ற பிரதேச சபையின் 44வது அமர்வில் “நான் இன்று முதல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து விலகி எதிரணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து கொள்கின்றேன் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கப் போகின்றேன்” என்று சபையில் ஊடகங்களுக்கு அறிவித்து சபை கலைந்தததும் எதிரணியுடன் இணைந்து கொண்டதையும் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தினீர்கள்.
இந்த நிகழ்வு நீங்கள் உங்களுக்கு எமது மக்களால் வழங்கப்பட்ட ஆணையை புறந்தள்ளி கட்சிக்கு மாறாக நடந்து கொள்வதையே வெளிப்படுத்தியது.
எனவே இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு நீங்கள் வழங்கிய வாக்குறுதியையும் கட்சியின் உறுப்பினர் என்ற ரீதியில் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடுகளையும் காற்றில் பறக்கவிட்டு எதிரணியுடன் சேர்ந்து செயற்பட்டு வரும் வைரமுத்து தியாகராஜா ஆகிய நீங்கள் 2014.11.28ம் திகதி முதல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் எனும் தனித்துவத்தில் இருந்து இடைநிறுத்தப் படுகின்றீர்கள் என்பதை இத்தால் அறியத்தருவதோடு, இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக எமது கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு உங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பாக விசாரணை நடாத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது தொடர்பாக நீங்கள் ஏதும் விளக்கம் அளிப்பதாக இருந்தால் இக்கடிதம் கிடைத்து பதினான்கு தினங்களுக்குள் எழுத்து மூலம் அறிவிக்கலாம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment