11 Dec 2014

போரதிவுப்பற்று பிரதேசத்தில் 7624 குடும்பங்களுக்கு, 19060000 ரூபா நிதி இன்று வழங்கி வைப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதிவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபா வீதம்  7624 குடும்பங்களுக்கு, 190 60000 ரூபா நிதி இன்று வழங்கி வைக்கப் பட்டுள்ளதாக போரதீவுப் பற்று பிரதேச திவி நெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர் க.உதயகுமார் தெரிவித்தார்.

திவிநெகும திணைக்களத்தினூடாக செழிப்பான இல்லம் எனும் செயற்றிட்டத்தின் கீழ் திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்காக  ஒரு குடும்பத்திற்காக 10000 ரூபாய் மானியமாக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட நிதியாக  இந்நிதி வழங்கப் பட்டுள்ளது.  மிகுதிப் பணம் இம்மாத்தினுள் பயனாளிகளுக்கு திவி  நெகும வங்கிகளுடாக வழங்கப் படவுள்ளதாகவும் க.உதயகுமார் மேலும் தெரிவித்தார்.

இவற்றினை விடஇன்றயதினம், போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு 25000 ரூபாய் பெறுமதியான நீர் பம்பிகளும், சுற்று வேலிக்குப் பயன்படும், முட்கம்பிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று புதன் கிழமை (10) மட்.திக்கோடை கணேச வித்தியாலயத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பழுகாமம் விபுலானந்த வித்தியாலயம், முனைத்தீவு பொதுக்கட்டிடம், பாலையடிவட்டை பொதுக் கட்டிடம், மற்றும் தம்பலவத்தை பொதுக்கட்டிடம் ஆகிய இடங்களிலும் வைத்து திவி நெகும பயனாளிகளுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீழ்குடியெற்றப் பிரதியமைச்சர் விநாயகமூரத்தி முரளிதரன், மற்றும், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் என பலரும் இதில் இணைந்து கொண்டு மக்களுக்கான இவ்வுதவிகளை வழங்கி வைத்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: