கல்முனை
பிரதேசத்தில் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி ஈசிகேஷ் மூலம் ஒரு கும்பல்
இப்பிரதேச வியாபாரிகளிடமிருந்து பணம் அறவிடுவதாக பொலிஸாருக்கு தகவல்
கிடைத்துள்ளதாகவும் இதுதொடர்பாக இப்பிரதேச வியாபாரிகள் மற்றும் பொது மக்கள்
அவதானமாக இருக்குமாறும் கல்முனை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
கல்முனைப்
பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் கையடக்கத் தொலைபேசி மூலம்
தொடர்பு கொண்டு கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ்
உத்தியோகத்தர்கள் போன்று பேசுவதாக நடித்து தமக்கு ஒரு தொகை பணம்
உடனடியாகத் தேவைப்படுவதாகவும் இதனை ஈசிகேஷ் மூலம் அனுப்பவைக்குமாறும் இப்
பிரதேசத்திலுள்ள வியாபாரிகளுக்கு தொலைபேசி அழைப்புக்கள் வருவதாகவும் இதனை
நம்பி பலர் ஏமாந்துள்ளதாகவும் மேலும் சிலர் இவர்களுக்கு ஈசிகேஷ் மூலம்
பணம் செலுத்தியுள்ளதாகவும் தமக்கு முறைப்பாடு செய்யதுள்ளதாக கல்முனை பொலிஸ்
நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ ஏ.கப்பார்தெரிவித்தார்.
எனவே இவ்வாறான
கும்பல்களின் நடவடிக்கைகளை நம்பி சிக்கி விட வேண்டாம் எனவும் இவ்வாறான
ஏமாற்று செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பாக நம்பத்தகுந்த தகவல்கள்
தெரிந்தோர் உடன் தமக்கு அறியத்தருமாறும் கல்முனை பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி ஏ.டப்ளியூ ஏ. கப்பார் தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment