(டிலாறா)
மருதமுனை ஹியூமன் லின்க் வலது குறைந்தோருக்கான நிறுவனம் நடாத்திய சர்வதேச வலது குறைந்தோர் தினம்-2014 நேற்று (11.12.2014) அதன் பணிப்பாளர் ஏ.கமறுத்தீன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சமூகசேவைகள் அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் வி.கௌரிதரன், சமூகசேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கே.காந்தீபன், அம்பாறை மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எம்.பி.சம்சுத்தீன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ் தொகுத்து வழங்கினார்.
காலை 9.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை மாணவர்களின் கலை நிகழ்சியும் மாலை 2.00மணி தொடக்கம் இன்று 12ம் திகதி இரவூ.00மணி வரைக்கும் கண்காட்சியும் விற்பணையும் நடைபெறுகின்றது.
0 Comments:
Post a Comment