66வது
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்
நடாத்திய மனிதஉரிமை தின கொண்டாட்டத்தின் ஓரங்கமாக கல்முனை வலய பாடசாலை
உயர்தரவகுப்பு மாணவரிடையே சுழலும் சொற்போர் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்விற்கு எழுத்தாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா பிரதான
நடுவராகக்கடமையாற்ற ஏனைய நடுவர்களாக எம்.எஸ்.ஜலீல் பொன்.ஸ்ரீகாந் ஆகியோர்
செயலாற்றினர். கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி மஹ்மூத் மகளிர் கல்லூரி
இ.கி.மகா வித்தியாலயம் மற்றும் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி ஆகிய
04 முன்னணிப்பாடசாலைகள் பங்கேற்றன.
சகவாழ்விற்கும் நல்லிணக்கத்திற்கும்
சமுதாயத்திலுள்ளோரின் பொறுப்புகள் பற்றி சொற்போர் நிகழ்த்தப்பட்டது.
சிறப்பாக செயற்பட்ட போட்டியாளர்களுக்கு நினைவுக்கேடயங்கள் அதிதிகளால்
வழங்கப்பட்டன.

0 Comments:
Post a Comment